உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...!
சொத்துக்களை எப்போது விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்-When is best time to sell your property?
அனைவருக்கும் வணக்கம்.
ஒரு மனிதனுக்கு இரண்டுவிதமான பலம் வேண்டும் எனபார்கள். ஒன்று பணபலம் மற்றொன்று ஆள்பலம். இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது வைத்திருப்பவரே வலிமையானவராக கருதப்படுகின்றார்கள். இவற்றை ஒருவன் தனது வாழ்நாளில் மறவாது தேடிவைத்துக் கொள்ளவேண்டும். இத்தகைய கருத்தினை, "பணமிருக்கணும், இல்லாவிட்டால் பத்து சனமிருக்கணும்" என்று பெரிவர்கள் கூறுவார்கள்.
பழமொழிக்குகூட பணத்தைதான் முன்னிலைபடுத்தி கூறுகின்றோம். காரணம் 'கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’ என்று சொல்லி கேட்டிருப்போம். பணம் பாதாளம் வரை பாயும் என்பது நிதர்சனமான உண்மைதான்.
"பணமும் பத்தாயிருக்க வேணும்!
பெண்ணும் முத்தாயிருக்க வேணும்!
முறையிலேயும் அத்தை மகளாய் இருக்கவேணும்!"
என்று கிராமத்தில் மிக அருமையாக கூறுவார்கள்.
கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல; அதிகம் விரும்புபவனே ஏழை என்று தத்வார்த்தமாக வாதிட்டாலும் ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல் தேவைகள் பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில், ஒருவன் அவசிய தேவைக்கும், அவசர தேவைக்கும் பொருளீடவில்லை என்றால் எதிர்காலத்தில் மிகுந்த அவதிக்கு ஆளாக வேண்டியதுதான்.
"பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான்" என்று வால்டேர் கூறுவார். பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும் என்று பிராங்க்ளின் கூறுவார்.
சேமிப்பு இல்லாதபோது வட்டிக்கு கடன் வாங்க நேரிடும். வங்கி அல்லாத பிற நபர்களிடம் கந்து வட்டிக்கு வாங்கி பணம் செலவு செய்தால் கடனாளியாவது நிச்சயம். சம்பாதிக்கும் பணத்தில் வட்டிக்கே பெரும்தொகை சென்று விடும்.
ஒருவருக்கு பணதேவை எப்போது வரும் என்று சொல்ல முடியாது. வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் நிகழும்போது திடீரென பணம் தேவைப்படும். அத்தகைய சூழ்நிலைகளில் உதவுபவை நாம் சேமித்து வைத்திருக்கும் பணம்தான், சேமிப்பு பணம் போதாத போது அடுத்து கைகொடுப்பது தங்க நகைககள்.
"சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கால் பணம்" என்று தங்கத்தின் மீதான முதலீடும் நீண்ட கால முதலீடுக்கு ஏற்றாதா? என்று யோசிக்கும் அளவிற்கு அதன் மீதான உபரி செலவீனங்கள் உணர்த்துகின்றன.மிக பெரிய செலவை இவை இரண்டும் ஈடுகட்டாதபோது நமது கவனம் அசையா சொத்துக்கள் மீது திரும்பும். பெருந்தொகை தேவைகளை ஈடுகட்டுவதில் அசையா சொத்துகளின் பங்கு அலாதியானது.
வாழ்க்கையின் எதிர்கால அவசர தேவைகளை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான முதலீடாகவும், வருமானத்தின் உபரிகளை மீதமாகவும், வீன் செலவை தவிர்க்கும் சேமிப்பாகவும், பன்மடங்கு லாபத்திற்காவும், அந்தஸ்த்தை மிகைபடுத்திகொள்வதற்கும் "வருமானத்தை அசையா சொத்தாக மாற்றும் புத்திசாலிதனமான இயல்பை", பண்டைய காலந்தொட்டு, வழிவழியாக நாம் கடைபிடித்து வருகின்றோம்".
ஒருவருக்கு எதிர்கால பணதேவை என்பது இரு வகைகளில் தேவைபடுகின்றது. ஒன்று திட்டமிட்ட எதிர்கால செலவுகள் மற்றொன்று எதிர்பாராத திடீர் செலவுகள்.பிள்ளைகளின் படிப்பு, திருமணம், தொழில் விரிவாக்கம், சுப மற்றும் அசுப நிகழ்வு செலவீனம், எதிர்பாரா திடிர் மருத்துவ செலவுகள் மற்றும் இதர காரணங்களுக்காக சொத்துக்களை விற்று காசாக்கி தேவைகளை சிரமமின்றி பூர்த்திசெய்கின்றோம்.
இந்த செலவீனங்களை எதிர்பார்த்த அளவிற்கு திருப்தியுடன் தேவைக்கு ஏற்றவாறு சமாளிக்க வேண்ம் என்றால் வாங்கிய சொத்துக்கள் நல்ல லாபத்துடன், எவ்வித பிரச்சனையும் இன்றி விற்பனையாக வேண்டும்.அதற்கு ஜாதகத்தில் பாவமுனைகள் நல்ல அமைப்புடனும், நடக்கும் தசாபுக்திகள் சாதகமாக அமைய வேண்டும்.
கஷ்டபட்டு சேமித்த வருமானத்தை நல்ல சொத்தாக்கி, வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து, வாழ்க்கையின் இறுதியில் நஷ்டத்தில் இழந்தால் அதைவிட பெருங்கொடுமை வேறொன்றும் இல்லை.திட்டமிட்ட செலவீனங்களை, சொத்துக்களை விற்று, அந்த செலவீனங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையிருந்தால், "ஜாதகத்தில் சாதகமான தசாபுக்தி நடைபெறும் காலங்களிலே, நல்ல லாபத்துடன் சொத்துக்களை விற்று வங்கியில் பணமாக சேமித்துவிடுவதுதான் புத்திசாலிதனம்".
கடைசி நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருப்பவர்களுக்கு அதற்கேற்ற பலனைதான் அனுபவிப்பார்கள்.
சார ஜோதிட விதிகள் மூலமாக ஒருவர் சொத்துக்களை எளிதாக விற்பாரா? நல்ல லாபத்துடன் விற்பாரா? நஷ்டத்துடன் விற்பாரா என்று விளக்கமாக இனி அறிவோம்.
என் சொத்துக்களை விற்க முடியுமா?
- அசையா சொத்துக்கள் மற்றும் நிரந்தர உடைமைகளை குறிக்கும் பாவம் 4ம் பாவம்.
- 4ம் பாவத்திற்கு 12ம் பாவமான 3ம் பாவம் எதையும் சுருக்குதல், மாற்றுதல், பெயறுதல் என்ற காரக தன்மையை வைத்திருப்பதால் இது 4ம் பாவத்தை கெடுக்கும் பாவமாக கருதபடுகின்றது.
- லக்னம் ஜாதகர் என்றால், 7ம் பாவம் சொத்துக்களை வாங்குபவர். 7ம் பாவம் என்பது ஒன்றை கொடுத்து ஒன்றை பெறுவது. அவர் சொத்துக்களை வாங்குவாரா? வாங்கமாட்டாரா? என்று அறிய 7க்கு 4ம் வீடான 10ம் வீட்டு பாவமுனையை பார்க்க வேண்டும்.
- ஜாதகரின் லக்னத்தில் இருந்து 10ம் மற்றும் 5ம் பாவமுனைகள் யாவும் சொத்துக்களை வாங்குபவர்க்கு (7ம் வீட்டு பாவமுனை) முறையே 4ம் வீடாகவும் ( உடமைகள்), 11ம் வீடாகவும் (வாங்குபவரின் ஆசை நிறைவேறுதல்) அமைகின்றது. ஆக ஒருவர் தன் சொத்துக்களை பிரச்சனையின்றி விற்க வேண்டும் என்றால் ஜாதகரின் 3ம், 5ம், 10ம் பாவமுனைகளின் தொடர்புகள் நல்லவிதத்தில் அமைய வேண்டும்.
நல்ல லாபத்துடன் சொத்துக்களை விற்பேனா?
- ஒருவருக்கு மூன்றாம் பாவத்தை முன்னிருத்தி ஒற்றைபடை தசா/புக்திகள் நீண்ட காலம் தொடர்ந்து நடைபெற்றால் தன் தேவைகளை சமாலிப்பதற்காக சொத்துக்களை எவ்வித சிரமம் இன்றி விற்பார்.
- 12ம் பாவம் என்பது ஜாதகர் சொத்துக்களை ஒப்படைப்பது. 12ம் வீடு தன்பவத்தையும், லக்னத்திற்கு 8ம் பாவத்தையும் எவ்வித தொடர்பு இல்லாமல் இரட்டைபடை பாவங்களை தொடர்புகொண்டிருந்தால் ஜாதகர் தன் சொத்துக்களை நல்ல லாபத்துடன் விற்பார்.
சொத்துக்களை நஷ்டத்திற்கு விற்பேனா?
10ம் வீட்டு உபாதிபதி லக்னத்திற்கு 8ம் வீட்டை தொடர்புகொண்டிருந்தால் ஜாதகர் தன் சொத்துக்களை விற்று பணமாக்குவதில் மிகுந்த சிரமம் அடைவார்.10ம் வீட்டு உபாதிபதி லக்னத்திற்கு 12ம் வீட்டை தொடர்புகொண்டிருந்தால் ஜாதகர் தன் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்பார்.
ஆக பத்தாம் பாவத்தின் 8,12 பாவதொடர்பு சொத்துக்களை வாங்குபவர்க்கே லாபமாக அமையும்.
ஒருவருக்கு 8,12ம் பாவங்களை மையபடுத்தி நடைபெறும் தசாபுக்தி காலங்களில் சொத்துக்களை வாங்கவோ அல்லது விற்கவோ கூடாது.
பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்,
என்றும் அன்புடன்...
திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer
+91-8 8 2 5 5 1 8 6 3 4
astrotilakjbalamurugan@gmail.com
Contact kpj gems who helped thousands of people getting happiness in their life. Get 100% Solutions for all your problems from the Best astrologer in Chennai online / Tamil astrologer online consultation / Astrology consultation in Chennai.
ReplyDeleteAstrology consultation in Chennai