உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...!
பரிதவிக்கும் பெத்தமனம் விழி காண துடிக்குது மகளின் மணகோலம்..!
அனைவருக்கும் வணக்கம்.நம்மிடம் ஜோதிட ஆலோசனைக்காக ஒரு அம்மா தொடர்புகொண்டார். 28 வயதாகும் தன் மகளின் திருமண வாழ்வு எப்படி இருக்கும் என்று அறிய வேண்டி ஜோதிட ஆலோசனை கேட்டார்.
என் கனவர் நல்ல அந்தஸ்தானவர். ஜாதி சங்கத்தில் முக்கிய பொருப்பில் உள்ளார். அரசியல் பின்புலம், கோடி கணக்கில் சொத்துக்கள், ஆடம்பர வீடு, மகளின் மாத வருமானம் லகரத்தில். இப்படி அனைத்தும் இருந்தும் என் மகளின் திருமண வாழ்வில் ஏனோ இவ்வளவு தடங்களும் சோதனைகளும் தெரியவில்லை.
தன் மகளின் கல்லூரி காலத்தில் வகுப்பு தோழனுடன் ஏற்பட்ட காதலால் அவரையே மணப்பேன் என்று பிடிவாதமாக உள்ளார். எனது கனவரோ வேற்று ஜாதி சம்பந்தம் வேண்டாம் என்று கடுமையாக மறுத்து வருகின்றார். இவர்களுக்கிடையேயான போராட்டத்தில் நான் சிக்கி மனநிம்மதி இழந்து தவிக்கின்றேன்.
சீரும் சிறப்புடன் மகளின் திருமணத்தை வெகு விமரிசையாக நிகழ்த்த நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தோம். ஆனால் காதல் பிரச்சனையால் எல்லாம் சுக்குநூறாகிவிட்டது.
என் மகளுக்கு திருமண வைபோகம் நிகழுமா என்று மிகுந்த வேதனையுடன் கேட்டார்கள்.
ஜாதகியின் பிறப்பு விவரங்களை தந்தார். அவர் அளித்த தேதி 29-03-1991 நேரம் 7:15 Pm - 07:30pm. சரியான நேரம் தெரியவில்லை என்றார்.
ஆளும் கிரகங்களின் உதவியுடன் சரியான பிறந்த நேரத்தை கண்டுபிடித்து துல்லியமான ஜாதகத்தை கணித்து லக்ன நிலை மற்றும் நட்சத்திர விவரங்களை கூறினேன்.
ஜாதகி் கன்னியா லக்னம் மற்றும் ஜென்ம ராசியாக கன்னியா ராசி், ஜென்ம நட்சத்திரம் உத்திரம் 3ம் பாதம் சூரியன் நட்சத்திரம், திதி பௌர்ணமி, விருத்தி யோகம், பத்தரை கரணம், சித்த யோகம், செவ்வாய் ஹோரை, வெள்ளி கிழமை அன்று ஜனித்துள்ளார்.
ஏற்கனவே கணித்த ஜாதகம் துலாம் லக்னம் ஆதலால் இதுவரை அதையே பயன்படுத்தி வந்ததால் ஏகபட்ட குழப்பம் என்றார்.
ஆம். இந்த ஜாதகி லக்ன சந்தியில் பிறந்துள்ளதால் நிகழ்ந்த குழப்பம் இது. இப்போது குழப்பத்தை நிவர்த்தி செய்தாகிவிட்டது.
துல்லிய ஜாதகமுமம் நம் மூலம் கிடைத்துவிட்டது.
பொதுவாக கன்னியா லக்னம், ரிஷப லக்னம், மகர லக்ன காரர்களுக்கு குடும்ப வாழ்வு எட்டா கனியாகவோ அல்லது பிரச்சனையுடனோ அமையும்.
காலபுருஷ தத்துவத்தின் படி 12ம்வீடான மீன ராசி, உபய ராசியான கன்னிக்கு 7ம் வீடாக வரும். நில ராசியான கன்னிவீட்டுக்கு, நிலையற்ற உபய ராசி வாழ்க்கை துணையாக அமைவதால், மாற்றத்தை குறிக்கும். இது (7,12) (12,7) ஆக செயல்படும்.
12ம் வீடு விரையத்தையும், பிரிவையும், தனித்து வாழ்வதையும், விரக்தி நிலையை குறிக்கும். காலபுருஷ இயக்க தத்துவத்தின்படி, இயற்கை பொது காரகங்கள்தான் 50% ஜாதகத்தில் வேலை செய்யும்.
பஞ்சபூத தத்துவத்தில் உத்திரம் 3ம் பாதம் காற்று வகையை சார்ந்தது. ஜென்ம நட்சத்திர பலன்கள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.
ராசி கட்டத்தில் கிரகங்களின் அமர்வு
லக்னம் மற்றும் ராசி நாதன் புதன் 7ம் வீட்டில் சுக்கிரனுடன் மேஷத்தில் உள்ளார். சுக்கிரன் 2 மற்றும் 9ம் வீட்டின் அதிபதி.
நான்காம் வீடான மகரத்தில் சனி மற்றும் ராகுவின் அமர்வு, அதற்கு 7ம் வீட்டில் கடகத்தில் கேது மற்றும் குரு இணைவு.
தந்தை காரகன் சூரியன் 6ம் வீட்டில் மீனத்தில் அமர்வு. பெண்களுக்கு களத்திரகாரகன் செவ்வாய் ஒன்பதாம் வீடான மிதுனத்தில் அமர்வு.
ராசி சக்கரத்தில் அனைத்து கிரகங்களின் அமர்வு பார்ப்பதற்கு நல்ல நிலையில் தெரிந்தாலும் காலாகாலத்தில் திருமண பந்ததில் இணைய கொடுப்பினையை மறுப்பதற்கான காரணம் என்ன?
காலசக்கரத்தில் 12 ராசி கட்டங்களில், கிரங்களின் அமர்வை மட்டும் பார்த்தால் சரியான பலனை ஓரளவு மட்டுமே அறிய இயலும். இது ஒரு மேலோட்டமான ஆய்வு, துல்லியமாக பலனை அறிய, சரியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றால் உயர்கணித சாரஜோதிட முறையில், பாவமுனைகளின் தொடர்பை உட்படுத்தி கிரகங்கள் மற்றும் பாவ முனைகளின் சாரத்தின் ஊடே அவை பெற்ற பாவ தொடர்புகளை உண்ணிப்பாக ஆராய வேண்டும். அப்பொழுதுதான் விதிகொடுப்பினையின் முழு விவரங்களையும் மிக துல்லியமாக அறிய இயலும்.
அது எப்படி சார ஜோதிடத்தில் மிக சரியாக பலன்களை அறிய முடியும்?
ஆம்! உயர்கணித சார ஜோதிட முறையில் பலன்களை மிக துல்லியமாக அறிந்திடலாம்.
சரி. முதலில் சார ஜோதிடத்தின் அடிப்படை கோட்பாட்டை அறிந்தால்தான், பாவமுனை தத்துவத்தின் இயங்கு நிலையில் பலன்களை எவ்வாறு நிர்ணயிக்க முடியும் என்பதை அறியலாம். அதற்கான விளக்கத்தை மிக எளிமையாக தங்களுக்கு புரியும் விதத்தில் இனி காண்போம்.
பாவமுனை புள்ளிகள்
ஒரு ஜாதகர் என்ன நோக்கத்திற்காக ஜனித்துள்ளார், இப்பிறவியில் ஜாதகர் அனுபவிக்க எவை கொடுக்கபட்டுள்ளது, எவை மறுக்கபட்டுள்ளது என்பதை பாவமுனை புள்ளிகளே நிர்ணயிக்கின்றன.
பாவமுனைகள் கொடுப்பினையை அளந்துகாட்டும் துல்லியமாணி என்றால் அது மிகை ஆகாது. ஏனென்றால் ஒரு சம்பவத்தின் அனைத்து நிகழ்வுகளும் பாவத்தின் ஆரம்பமுனையில் நிச்சயிக்கபடுகின்றன.
பாவ முனையின் ஆரம்ப நிலை அடிப்படையில் சம அளவற்ற ராசி சக்கரம் நிர்ணயிக்கபடுகின்றன. இது பாரம்பரிய ஜோதிட முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட காலசக்கர அமைப்பு ஆகும்.
பாவமுனைகள் எதன் அடிப்படையில் செயல்படுகின்றன?
பாவமுனைகள் என்பது உபநட்சத்திர கோட்பாடுகளை உள்ளடக்கி, நின்ற உப அதிபதியின் வலிமையில் பலமாக இயங்கும் சாரதத்துவ கோட்பாடு ஆகும்.
லக்னம் என்பது உயிர், அதுதான் ஜாதகர், லக்னத்தை தவிர்த்து மற்ற 11 பாவமுனைகளும், லக்னத்திற்கு ஒரு விளைவையும், தன்பாவத்திற்கு ஒரு விளைவையும் முன்னிறுத்தி தனித்து இயங்கும் தத்துவத்தின் அடிப்படையில் பலாபலன்களை வாரி வழங்குபவை.
பாவ முனையில் நின்ற உப நட்சத்திரம் மிகவும் வலிமை வாய்ந்தவை, அதற்கு அடுத்த குறைந்த நிலையில் உப உப நட்சத்திரம், உப உப உப நட்சத்திரம் மற்றும் நட்சத்திரம், அமர்ந்த கிரகம் மற்றும் ராசி அதிபதி ஆகியவை தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் கொண்ட தொடர்புகள் மூலம் பலனை தனக்கான அதிகார எல்லையின் அளவீட்டு முறையில் வழங்குகின்றன.
அதிகார அளவீடா? அது என்ன சதவிகித அடிப்படையில் கிரகங்கள் வகைபடுத்தபட்டுள்ளதா?
ஆம். பாவ முனையின் உப நட்சத்திரம் 60%, உப உப நட்சத்திரம் 25%, உப உப உப நட்சத்திரம் 10%, நட்சத்திரம் 5% என்ற விகிதாச்சார அளவில், கிரகங்கள் தன் சார பலன்களை பொருத்து, 12 பாவங்களுக்கும் பலன்களை வழங்குகின்றன. இதுவே சாரஜோதிடத்தின் அடிப்படை ஜோதிட கோட்பாடு ஆகும்.
அன்பு வாசகர்கள் தற்போது சாரஜோதிடத்தில் நல்ல புரிதலை உணர்ந்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இந்த எளிய விதிகளை மனதில் நிறுத்தினால்தான் பலன்களை துல்லியமாக அறியமுடியும்.
சரி. ஜாதக ஆய்வை துவங்குவோம்.
கிரக காரகம் & கிரக தொடர்புகள்
கிரகங்கள் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப.நட் மூலம் தொடர்புகொண்ட பாவங்களின் பலன்களை முன்னிருத்தி ஜாதகரின் யோக, அவ யோக பலன்களை வழங்குகின்றன. விதிபடி ஜாதகர் அனுபவிக்க வேண்டியதை கிரகங்கள் தனது தசா புக்தி வரும் காலங்களில் ஜாதகரை அனுபவிக்க செய்கின்றன.
- சூரியன் -> 6,8,12 தந்தை மூலம் ஜாதகி சில சங்கடங்களை நன்றாக அனுபவிப்பார்.
- சந்திரன் -> 2,6,8,12 ஜாதகி மன அழுத்த பாதிப்பில் அவ்வபோது ஆட்படுவார்.
- செவ்வாய் -> 2,6,8 பிடிவாத குணம், மூர்க்க தனம், விவாத விரும்பி, சமமற்ற வாழ்க்கை துணைவர். துணைவர் மூலம் தொல்லையடைவார்.
- புதன்-> 2,4,8,10,12 உறவினருடன் பிரச்சனை, அனுசரித்து சென்றால் உறவினருடன் ஒற்றுமை சிறக்கும்.
- குரு -> 1,3,5,7,9,11 அகம் சார்ந்த விசயங்களுக்கு நன்மை.
- சுக்கிரன் -> 2,6,8,12 பொருளாதார வகையில் சிறப்பு. அக வாழ்வில் சிறப்பாக செயல்பட ஜாதகி முயற்சிக்க வேண்டும்.
- சனி -> 8,12 அசுப தன்மை பலமாக வலுத்துள்ளது. இவருக்கு கீழ் பணிபுரிபவருடன் சிக்கல்களை சந்திப்பார்.
- ராகு -> 6,8,12 அசுப பலனை தயக்கமின்றி வழங்கிடுவார்.
- கேது -> 3,5,9,11 சுப தன்மையுடன் உள்ளது.
பாவ தொடர்புகள்
லக்ன பாவம் (1ம் வீடு)
இந்த ஜாதகத்தில், ஜாதகி ஜனித்த நேரத்தில் லக்ன பாவமுனை கன்னி ராசியில் 28° 24' 51" பாகையில் சித்திரை 2ம் பாதம் செவ்வாய் நட்சத்திரத்தில் விழுந்துள்ளது. ராசி அதிபதி புதன்.செ | சனி - புத - ராகு
லக்னம் செவ்வாய் சாரத்தில், சனி உப நட்சத்திரத்தில், புதன் உப உப.ந, ராகு உஉஉ.ந அமைந்துள்ளது. லக்ன பாவ உபாதிபதி சனி, லக்ன பாவத்தின் பலன்களை வழங்க அதிகாரம் ஏற்றுள்ளார்.
கிரகம் ந.அ உப.ந
-----------------------------------------
சனி | சந் - செவ்
1,7 | (12) - (8)
1ம் பாவம் -> 8,12
இதன் மூலம் லக்ன பாவமுனை வலிமையாக 8,12ம் பாவங்களை தொடர்புகொண்டுள்ளது.
பொதுவாக லக்னத்திற்கு தீங்கு தரும் பாவங்கள் 4,8,12 ஆகியவை ஆகும். இதன் மூலம் ஜாதகியின் லக்ன கொடுப்பினை கெட்டுள்ளது என்பதை அறியமுடிகின்றது.
ஜாதகருக்கு லக்ன பாவம் எந்த வகையிலும் துர்ஸ்தானங்களான 8,12 தொடர்புகொள்ளவே கூடாது. இந்த 8,12 பாவங்கள் ஜாதகிக்கு சாதகமற்ற பலன்களை வழங்கி அவர் தன் முடிவில் பிடிவாதத்துடன் செயல்பட வைத்து அவருக்கு கிடைக்கவேண்டிய நற்பலன்களை தானாகவே கெடுத்துக்கொள்கூடிய நிலையை தந்திடுவார்.
குடும்ப ஸ்தானம்
ஜாதகர் தன்வாழ்வில் புதியவர்களை இணைத்து நல் உறவை பேணுதலை குறிக்கும் பாவம் இரண்டாம் பாவம்.
2ம் பாவத்திற்கு சுக்கிரன் உபாதிபதியாக அமைந்து இரண்டாம் பாவம் 2,6,8,12 ஆகிய பாவங்களை தொடர்புகொண்டுள்ளது.
இதுவும் குடும்ப அமைப்பில் சாதகமற்ற நிலையையே குறிகின்றது. அகம் சார்ந்த காரங்களுக்கு ஒற்றைபடை தொடர்புகொள்வதே சிறப்பு. இங்கு ஜாதகியின் தனவரவிற்கு சாதகமாக இரண்டாம் பாவம் உள்ளதே தவிர குடும்ப வாழ்விற்கு சற்று சாதகமற்ற நிலையில் உள்ளது.
பூர்வபுண்ணிய ஸ்தானம்(5ம் பாவம்)
காதலை குறிக்கும் பாவம் 5ம் பாவம். இதற்கு இயற்கை சுபரான குரு உபாதிபதியாக அமைந்துள்ளார். மேலும் குருவே 3,5,9,11 ஆகிய பாவங்களுக்கும் உபாதிபதியாக இருப்பதனால் அகம் சார்ந்த மற்ற ஒற்றைபடை பாவங்கள் வலுவாக உள்ளது.
குரு -> சனி சாரத்தில், சுக்கிரன் உபநட்சத்திரத்தில் அமர்ந்து சிறபாக உள்ளார்.
5ம் பாவம் -> 1,3,5,7,9,11 ஆகிய பாவங்களை தொடர்புகொண்டுள்ளதால் ஜாதகி காதல் வலையில் விழுவார் என்பதை உணர்த்தும் வகையில் விதிபடி நிகழ்வுகள் நிறைவேறியுள்ளன.
களத்திர ஸ்தானம்(7ம் பாவம்)
7ம் பாவம் சனி உப நட்சத்திரத்தில் அமைந்து தொடர்புகொண்ட பாவங்கள் 8,12. களத்திர பாவம் கடுமையாக கெட்டுள்ளது. மேலும் சனி அமர்ந்த நட்சத்திரம் சந்திரன். இது புணர்பு தோஷத்தை தரும். 7ம் பாவம் சார்ந்த காரகங்கள் அவ்வளவு எளிதில் நிகழ்ந்துவிடாது. மேலும் சனி அமர்ந்த உப நட்சத்திரம் செவ்வாய். 8ம் பாவ உப நட்சத்திரமான செவ்வாயின் 7ம் பாவ சம்பந்தம் ஜாதகியின் திருமணம் பிரச்சனையுடன் நிகழும் என்பதை குறிகாட்டுகின்றது.
மாங்கல்ய ஸ்தானம்(8ம் பாவம்)
மாங்கல்ய ஸ்தானத்தின் உபாதிபதி செவ்வாய். 8ம் பாவத்தின் தொடர்பு 2,6,8. இதுவும் குடும்ப வாழ்விற்கு ஏற்றதாக இல்லை.
ஜாதகிக்கு முதல் களத்திரம் வலுவாக இல்லை. காதல் கணவரை கரம் பிடிப்பார். ஆனால் நீடித்த குடும்ப வாழ்வில் சிக்கலுடன் காலத்தை கழிப்பார். நிம்மதியான வாழ்விற்கு உத்திரவாதமற்ற களத்திர சிக்கலுடன் உள்ள ஜாதகம்.
குரு மற்றும் கேது குடும்ப வாழ்விற்கு சாதகமா உள்ளார்கள். இவர்களது தசாபுக்தி காலங்கள் நன்றாக இருக்கும்.தற்போது ஜாதகிக்கு ராகு தசை புதன் புக்தி நடக்கின்றது. தற்போது ஜாதகிக்கு குடும்ப வாழ்விற்கு 01/12/2019 வரை சாதகமாக இல்லை. அதன் பிறகு வரவிருக்கும் குரு அந்தரம் நன்றாக உள்ளது. திருமணம் நடத்த சாதகமாக உள்ளது.
அடுத்து வரும் குரு தசை மிகவும் நன்றாக உள்ளது. குடும்ப வாழ்வை ஜாதகி குதுகலத்துடன் நன்றாக வாழ்வார்.கவலை வேண்டாம் திருமணம் நல்லபடியாக நிகழும் என்று அவருக்கு பதில் உரைத்தோம்.
இந்த கால கட்டத்தில் திருமணத்தை நடத்துவது பிரச்சனை இன்றி முடிக்க சாதகமாக இருக்கும்.
பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்,
என்றும் அன்புடன்...
திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer
+91-8 8 2 5 5 1 8 6 3 4
astrotilakjbalamurugan@gmail.com
No comments:
Post a Comment