உச்சிஷ்ட மகா கணபதி போற்றி...!
உங்கள் காதல் நல்ல காதலா? கள்ள காதலா?
காதலித்து பார்உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும் ராத்திரியில் நீளம் விளங்கும் உனக்கும் கவிதை வரும் கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வம் ஆவான்உன்பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும் கண் இரண்டும் ஒளிகொள்ளும் காதலித்து பார் ...!என்று கவிஞர் வைரமுத்து அவர்கள், காதல் உணர்வுகளை தம் கவிதை வரிகளில் மிக அழகாக கூறியிருப்பார். ஆனால் காதலிக்கும் அனைவருக்குமே, தன் காதல் திருமணம் வரை செல்கிறதா? காதல் வாழ்வில் நூற்றாண்டு கண்டு வரலாறு படைகின்றதா? எல்லாம் அவரவர் கருமத்தின் படியே ஜாதக கொடுப்பினைக்கு ஏற்ப நிகழ்கின்றது.
"Many of us believe that when we give love, We are getting the love back but sometimes it's just an illusion of what we gave them."
கனவுகள் போலவே யாருக்கும் தெரியாமலே கலைந்து போகின்றது ஒரு சில பெண்களின் ஆசைகளும். காதலித்து ஏமாற்றம் அடையும் பெண்களும் இருக்கின்றார்கள்.
விதைத்தது அன்பென்றாலும் விளைவது கண்ணீர் துளிகளே...! என்று பெண்களால் ஏமாற்றபட்ட ஆண்களும் இந்த சமூகத்தில் இருக்கதான் செய்கிறார்கள்.
காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள்.
ஹார்மோன் மாற்றத்தாலும், அதன் தூண்டுதலாலும் காதல் என்ற போர்வையில் பதின் வயது பெண்கள் போலியான நபர்களிடம் தம் வாழ்க்கையை தொலைகின்றார்கள்.
When people are in love, it can be hard for them to identify true love from fake love. There are so many stories of people who have got their heart broken because of fake love.காதல் தவறு என்று உரைப்பதற்கு இந்த பதிவு கிடையாது. காதலை போற்றும் உண்மையான ஜாதகர் யார் என்று அடையாளம் கானும் ஜோதிட விதிகளை பதிவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இன்றைய இளம் பெண்கள் பெரும்பாலோனர் மிகவும் புத்திசாலிகள். ஒருவனை காதலிக்கும் முன்பே, அவன் ஜாதகத்தை ஜோதிடர்களிடம் காட்டி இவன் நல்லவனா? கடைசிவரை காப்பாற்றுவானா? பழக்க வழக்கங்கள் நன்றாக இருக்குமா? என்று அனைத்தையும் தெளிவாக கேட்டு அறிந்த பிறகே, காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார்கள்.
காதலுக்கு முன்பு மட்டும் அல்ல காதலிக்கும் போதே சில பெண்கள் காதலனின் முழு ஜாதகத்தையும் அறிந்தே திருமணத்திற்கு கழுத்தை நீட்டுகின்றார்கள்.
Loving someone with all your heart and soul is not something to be ashamed of. It is, however, important to know how to distinguish pure love from false love.
சரி. ஒருவருக்கு காதல் ஏற்படுவதற்கான ஜோதிட விதிகள் என்ன?
மனதில் என்னங்களை எழுப்பும் சந்திரன், காதலாக உருபெற வைப்பவர் சுக்கிரன், அதை நல்ல விதத்தில் நிகழ்த்தி வைப்பவர் ஐந்தாம் பாவ உபாதிபதி.5ம் பாவம் என்னும் பூர்வபுண்ணிய ஸ்தானம், ஜோதிடத்தில் காதல் மற்றும் ஆழ்ந்த ஸ்பரிச, சுகந்த, இன்ப சிந்தனையை (குறிப்பிட்ட ஒரு சில சுகங்கள், பொழுதுபோக்கு செயல்களில் அதிக நாட்டம்), கலை துறை, உடல் உழைப்பு இல்லாத தன்மை போன்ற பாவகாரகங்களை கொண்டுள்ளது.
உன்னோடு பேசஎன்று காதல் வயப்பட்டவர்கள் அனைவரும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருப்பதற்கு இந்த 5ம் பாவ காரகமே காரணமாகும்.
ஒரு நிமிடம் கிடைத்தால்
போதும் எனக்கு...!
கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டுமல்ல
என் நெஞ்சோடு இருக்கும்
சின்ன சின்ன ஏக்கங்களும்
கவலைகளும் மறந்து
போகுமடா...!!
காதலில் முழு வெற்றி யாருக்கு?
எதையும் எதிர்பாராமல் நேசிப்பதும்...! எது நடந்தாலும் விட்டு விலகாமல் இருப்பதுமே உண்மையான அன்பு...!! இந்த மாதிரி அமைப்பு உள்ளவர்களின் ஜாதகத்தில் 5ம் பாவம் 5,7,11ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருக்கும். ஜாதகருக்கு காதல் வாழ்க்கையில் எவ்வித பிரச்சனையின்றி காதல் வாழ்வில் முழு வெற்றி அடைவார்.
உண்மை காதல் என்பது எதிர் பாலரின் பொருளாதாரம் (வரட்சனை, சீர்), அந்தஸ்த்து, தொழில் போன்றவற்றை பொருத்து எப்போதும் வருவதில்லை. மேலும் ஜோதிட ரீதியாக 5ம் பாவம் என்பது 2,10ம் பாவங்களுக்கு 4,8ம் பாவமாக அமைவதை இங்கு காணலாம்.
மேற்கண்ட 5ம் பாவ அமைப்பில் மாற்றம் உள்ள ஜாதகரின் காதல் காணல் நீராய் மறைந்துவிடும். ஜாதகர் "அவள் பக்கத்தில் இல்லாமல் போனாலும் அவளால் இங்கு பக்கத்தை நிரப்பி கொண்டிருக்கின்றேன் என்று சோக வரிகளை கிறுக்கி கொண்டு இருப்பார்.
இந்த மாதிரியான நிகழ்விற்கு ஜாதகத்தில் 5ம் பாவம் 4,10ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் வாழ்க்கையில் தோல்வி ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.
காதலால் அவமானபட்டு நடு தெருவுக்கு வரும் துர்பாக்கிய நிலை யாருக்கு?
5ம் பாவம் 5,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் தொழில், பணம், கௌரவம் அனைத்தும் இழந்து நடுதெருவுக்கு வரும் சூழ்நிலையை காட்டும்.
கலவி காதல் (Counterfeit love)
இந்த மாதிரியான ஆசாமியை காதல் செய்யும் பெண்களின் நிலமை இப்படி தான் இருக்கும்.. "விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது..! விரல்கள் சேர்த்து கொஞ்சம் வந்தது...!! முழு காதல் வந்ததா என்று தெரியவில்லை... மூன்று மாதம் கழிச்சு வயித்துல புள்ளதான் வந்தது" என்று புலம்புவார்.
காதல் நிராசை
கள்ள காதல் (The illicit love)
இந்த மாதிரியான ஆசாமிகளின் பேச்சும், பழக்கங்களும் சுயநலம் சார்ந்ததாகவும், பெண் சுகம் அனுபவிப்பதில் குறியாகவும் இருப்பார்கள்.
ஒரு படத்தில், நகைச்சுவை நடிகர், கவுண்டமணி, பால்காரராக நடித்து இருப்பார், அதில் ஒவ்வொரு வீட்டிற்கும் பால் ஊற்றும் போது ஆண்களிடம் சலிப்பாக பேசுவார், பெண்களிடம் சிரித்து பேசுவார்.
இப்படியாக ஒரு பெண்ணிடம் பேசும் போது.. " என்ன முனியம்மா சவுக்கியமா? என்று கேட்பார்! அந்த பெண் உடனே.. "நானும் என் புருசனும் சவுக்கியம்" என்பார்.. உடனே கவுண்டமணி.. "அந்த நாய பத்தி எவன் கேட்டான்" என்று பேசுவார். மேற்கண்ட ஜாதக அமைப்புள்ள ஆசாமிகள் பெண்களிடம் இந்த மாதிரியாக பழக கூடிய ரகத்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
இதே அமைப்பில் 7ம் பாவம் 8ம் பாவத்தை தொடர்புகொண்டால் கள்ள காதலால் கொலையுறுவார். முன்விரோத சண்டையில் நிகழும் கொலைகளைவிட கள்ளகாதல் காராணங்களால் நிகழும் கொலைகள்தான் அதிகமாக நடக்கின்றது.
இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களின் கட்டுபாட்டில் உள்ளது. ஒவ்வொருவரின் செயல்களும் அவர்கள் அறியாமலே கால சக்கரத்தில் பதிவாகி ஏதாவது ரூபதில் நவகிரங்களால் அம்பலபடுத்தபடும். தண்ணிக்குள்ள காற்று விட்டாலும் அது குமிழியாக வெளிபடும்.
இப்படிதான் வெளிநாட்டுல இருக்கிற அப்பாவுக்கு 8 வயது மகன் கடிதம் எழுதினான். அப்பா., இங்கு அனைவரும் நலம்.. தங்கள் நலம் அறிய அவா.
தாத்தா-பாட்டி அவங்க பாய்ல படுத்துகிறாங்க... நானும்-பாப்பாவும் எங்க பாய்ல படுத்துகிறோம்... அம்மா அவங்க பாய்ல படுத்துகிறாங்க...
ஊருல இருந்து அடிக்கடி வந்து போற சித்தபாவுக்கு, பாய் இல்லாமா, அம்மா மேல படுத்துகிறாரு...!!!
அதனாலா சித்தப்பாவுக்கு ஒரு பாய் அனுப்பி வைக்கவும் என்று கடிதத்தில் எழுதினான்.
பாருங்கு இருட்டுல நடக்குற மனைவியின் சங்கதி, எந்த ரூபத்தில் வெளிநாட்டுல இருக்குற கனவனுக்கு தெறியுது பாருங்க.
எல்லாம் நவகிரங்களின் நாட்டியம்...!
அறநெறி இல்லறத்தை மீறியவனுக்கு இன்பம் தற்காலிகம் தான். இறுதியில் மானம் இழந்து உயிர் இழக்க வைத்துவிடும்.5ம் பாவம் 3,5,9,11 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு (ஊரை) ஓடி செல்பவராக இருப்பார்கள். மேலும் சில சமயங்களில் இருவரும் ஏற்கனவே திருமணமான வர்களாகவும் இருக்கவும் வாய்ப்பு உண்டு. ஏன்னெனில் 9ம் பாவம் கள்ள தொடர்புகளை குறிக்கும்.
காதலர்களுக்குள் சண்டை நல்லது!
சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்குங்குற மாதிரி..! சண்டை போட்டுகாம இருக்கும் காதலர்கள் எங்கு இருக்காங்க..? காதலர்களுக்கு இடையில் சண்டைகள் நல்லது என்கிறது இங்கிலாந்தை சார்ந்த தன்னார்வ குடும்ப நலஅமைப்பு, ஆனால் எதுவும் ஒரு வரம்புக்குள்ள இருந்துவிட்டால் நல்லது. இப்படி ஐதாகத்தில் 5ம் பாவம் 2,8 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் காதலர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.காதல் பிளேபாய்
சமூக ஊடகங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பல பெண்களுக்கு காதல் வலை விரித்து உல்லாசம் அனுபவிக்கும் காதல் பிளேபாய்களின் ஜாதகத்தில்5ம் பாவம் 5,7,9,11 ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருக்கும், இந்த மாதிரியான ஜாதகருக்கு ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் காதல் செய்து தன் வலையில் விழ வைப்பார். உண்மை காதல் என்று எண்ணி விளக்கு வெளிச்சத்தில் மடிந்த விட்டில் பூச்சி போல் கற்பு இழந்த பெண்கள் ஏராளம்.
இந்த கதை இப்படினா நம்ம பயலுக்கு ஒரு பெண்ணுமே கிடைக்காம ஒத்த மரமாவே ல பேரு திரியுவான். பெருங் கூட்டத்துக் உள்ளேயும் தனி ஆளாவே இருப்பான். சரி! இந்த மாதிரியான அமைப்புக்கு என்ன காரணம்? ஜாதகத்தில் 5ம் பாவம் 4,6,8,10 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் யாரையும் காதலிக்க முடியாது. யாரையும் காதலித்தாலும் அது தோல்வியில் தான் முடியும். கடைசி வரைக்கும் கேர்ள் பிரண்ட் அமையவே அமையாது..! சுக்ராச்சாரியாவின் கடும் சாபத்திற்கு ஆட்பட்வனாவான்.
காதல் தோல்வியால் சித்தபிரம்மை
விலகி பார்த்தேன்என்று 5ம் பாவம் 3,8,10 ம் பாவங்களை தொடர்பு கொண்ட ஜாதகருக்கு காதல் தோல்வியால் சித்த பிரமை பிடித்து புலம்பிக்கொண்டு இருப்பார்.
விலக்கி பார்த்தேன்
மறந்து பார்த்தேன்
மறக்கவும் பார்த்தேன்
பிரிந்து நின்றேன்
எல்லாம் உடலால்
நடக்கின்றது!
உயிர்
உன்னையே நினைக்கின்றது...!
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
Thanks
This article drafted based on Stellar Astrology, Important rules in referenced with fb post by
"Jothida Aacharya" Dr. Annamalai MA (Astro)., MPhil (Astro)., PhD (Astro)
General Secretory, All India Stellar Astrologer Association.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்...
திலக். ஜெ. பாலமுருகன்
ADVANCED KP STELLAR ASTROLOGER
CHENNAI | TAMILNADU | INDIA
+91 - 8 8 2 5 5 1 8 6 3 4.
No comments:
Post a Comment