உச்சிஷ்ட மகா கணபதி போற்றி!
ஆபத்தில் உயிர்காக்கும் பாவங்கள்..! கடமை தவறா திரிகோணங்கள்..!!
ஒற்றை தன்மை
கொண்டவை
உயிர் தன்மை கொண்டவை!
நஞ்சுதனை
நஞ்சுதனை
முறித்து
நலம்வாழ
துணை புரிபவை!
இறை தொழிலில்
இசைவுடன்
பணிபுரிபவை!
நாதத்தில் திலைத்து
இன்புற வைப்பவை!
அம்பாளின்
திருகரங்களில்
வீற்றிருக்கும்
திரிசூலம்
போல்
ஜாதகத்தின்
திரிகோணங்களே!
திரிகோணங்கள்
அவையே
உயிர்காக்கும்
சூட்சம பாவங்கள்!
உயிர் காக்கும்
பாவங்கள்
கடமை தவறாத
திரிகோணங்கள்!
லக்ன பாவம் (1):
ஒருவர் ஜாதகத்தில், லக்ன பாவம் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக இருக்கும்.
6,8,12ம் பாவங்கள், ஜாதகர் பொதுவாக அனுபவிக்க கூடிய நோய்களை குறிப்பது. இந்த பாவங்களை தொடர்புகொண்ட மற்ற பாவங்களை பொருத்து ஜாதகரின் ஆரோக்கிய வாழ்வை நிர்ணயிக்கபடுகின்றது.
லக்ன பாவம் வலுபெற்றால் உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுபெற்று, உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கும்.
பூர்வ புண்ணிய ஸ்தானம் (5ம் பாவம்):
ஐந்தாம் பாவம் என்பது இயற்கை, அழகு, ஆச்சாரம், உடல் சுத்தம், கலை, இசை, மென்மையான உணர்வுகள், நகைச்சுவை உணர்வுகள், காதல் உணர்வு மற்றும் இன்ப உணர்வுகளை குறிக்கும் இயற்கை காரக பாவம் ஆகும்.
லக்ன பாவமும், 5ம் பாவமும் ஒன்றுக்கொன்று திரிகோண பாவம் என்பதால், மூளையும், இதயமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பில் இருக்கும்.
உடல் கூறில் 5ம் பாவம், இதயம், முதுகுத் தண்டு, போன்றவற்றையும், இது தவிர உடலில் உள்ள எல்லாவித ஹார்மோன்கள், வெள்ளை அணுக்கள், வாரிசை உறுவாக்கும் திறன் ஆகிய அனைத்து இயற்கை தன்மைகளை குறிக்கும்.
5ம் பாவத்தின் காரகமான வெள்ளை அணுக்கள், உடலுக்கு வரும் நச்சு கிருமிகளையும், தேவையற்ற நச்சு தன்மையை அகற்றி, உடலில் உள்ள பழைய செல்களை அழித்துவிட்டு, புதிய செல்களை பாதுகாக்கும்.
உடலில் சக்திகளை சேகரித்தல், வளர்ச்சி, பாலியல் பண்புகள், இனபெருக்கம் ஆகிய செயல்களை செய்ய ஹார்மோன்களே உதவுகின்றன. ஆபத்து காலத்தில் உடலில் நிகழும் திடிமாற்றங்களுக்கு காராணம் ஹார்மோன்கள் தான்.
பாக்கிய ஸ்தானம் (9ம் பாவம்)
இந்த திரிகோண பாவங்களிலே ஒன்பதாம் பாவம் மிகவும் வலிமையானது, தீர்க்க முடியத பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உன்னத பாவம்.
யூகிக்கும் திறன், வரக்கூடியவற்றை முன்கூட்டியே அறியும் அமானுஷி்ய பேராற்றல், மறைபொருளின் உயிர்க்காரகங்களை புதுபித்து புத்துயிர் தருதல் போன்ற பல ஆச்சரியம் தரும் ஆராய்ச்சி பாவம் என்றால் அது ஒன்பதாம் பவமே!.
ஒன்பதாம் பாவம் என்பது இறை அருளையும், ஆராய்ச்சியையும் குறிக்கும். கண்ணுக்கு தெரியாத மர்மங்களுக்கு உயிர் தந்து புதுபிக்கும் அற்புத ஆற்றல் ஒன்பதாம் பாவத்திற்கு உண்டு.
எமது குருநாதர், டிஜிடல்யுக வராஹிமிகிரர், ஜோதிஷ சக்ரவர்த்தி ஆ.தேவராஜ் அய்யா அவர்கள் சாரஜோதிட மருத்துவ நூலில் மிக அருமையாக கீழ்கண்வாறு விளக்கியிருப்பார்.
"9ம் பாவம் என்பது மிகவும் நுண்ணிய, நுணுக்கமான விஷயங்களை குறிக்கும். அதாவது விதை விருட்சமாக பரிணமைப்பது போல், மரம் என்பதை லக்னமாக கொண்டால் 9ம் பாவத்தை விதையாக கருதவேண்டும். "கீர்த்தி சிறிதானாலும் மூர்த்தி பெரியது" என்பது போல் தந்தையின் விந்தணு மனித செல்களில் மிகவும் சிறியவை ஆனால் விந்தணுக்களின் பெருக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்ட உருவமாக வடிவெடுப்பது இறைவன் படைப்பில் ஆச்சரியம் மிகுந்தது".
இயற்கை என்பது 9ம் பாவம், எப்பொழுதும் ஒரே மாதிரியான தன்மையை கொண்டிருக்காது ஆனால் 9க்கு 8ம் பாவம் 4ம் பாவம் ஒரே மாதிரியான தன்மையை கொண்டிருக்கும். நிலம், உற்பத்தி, திடப்பொருள்கள், செயற்கையான பொருட்கள் போன்றவற்றை 4ம் பாவம் குறிக்கும். மனித உடலில் உள்ள செல்களிலே மிகவும் பெரிய செல் எது என்றால்? "அது தாயின் கருமுட்டைதான்". மேலும் இது கண்களால் பார்க்ககூடிய பருப்பொருள் என்பதால் தாயை குறிக்கும் பாவம், நான்காம் பாவம் என்று ஜோதிடத்தில் அழைப்பது தெளிவாக புரிகின்றது.
கிரக காரகம் : குரு
ஜோதிடத்தில் குருவை முழு சுபராகவும், ஆன்மீகம், தெய்வம், இயற்கை போன்றவற்றிற்கு முதன்மை காரகராக கருதபடுகின்றது.
உயர் கணித சார ஜோதிட மருத்துவ ஜோதிடத்தில், உடலின் இயற்கை தன்மை, உடலுக்கு கிடைக்கும் தெய்வீக ஆற்றல், நேர்மறையன சிந்தனை, ஒழுக்கமான உணவு பழக்கங்கள் போன்றவற்றை கூறலாம்.
ஒரு உயிர் அல்லது உயிரினம் என்பது இயற்கையானது. எனவே குரு என்ற கிரகம், உடலில் உயிரை உருவாக்கும் சக்திக்கு காரகம் வகிக்கிறது.
பாவ காரகங்களில் இயற்கை, தெய்வீக காரகங்களை குறிக்கும் பாவங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானம் (5ம் பாவம்) மற்றும் பாக்கிய ஸ்தானம் (9ம் பாவம்) ஆகும். மேற்கண்ட 5,9ம் பாவங்களுக்கு உள்ள காரகங்கள் குருவின் காரகங்களுடன் பெருமளவு ஒத்து வரும்.
ஒன்பதாம் பாவம் என்பது இயற்கையை குறிப்பதால், ஜாதகரின் உடல், இயற்கையோடு இணைந்து நோய் எதிர்ப்பு திறனை பெற்றிருக்கும்.
உயிரின் இயக்க மையம் மூலாதாரம் என்னும் 9ம் பாவம்.
உடல் முழுவதும் இரத்தம் ஒடினாலும் அதன் இயக்க மையம் 5ம் பாவம் என்னும் இதயம். அது போலவே உயிரின் இயக்க மையமாக விளங்குவது 9ம் பாவம் என்னும் மூலாதாரம்.
இது முதுகு தண்டின் அடிபகுதிக்குச் சற்று கீழே உட்புறமாக அமைந்துள்ளது. இங்கு விந்து நாத திரவம் (Sexual Vital Fluid) செறிவாக அமைந்துள்ளது. இதிலிருந்து உயிர்துகள்கள் ஏற்பட்டு உடல் முழுவதும் ஒரு சுற்றோட்டமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இதனையே உயிரோட்டம் என்கின்றோம்.
நாம் உண்ணும் உணவானது உடலியக்க சிறப்பினால் ஏழுவகை தாதுக்களான இரசம், இரத்தம் (சந்திரன்)
தசை (செவ்வாய்)கொழுப்பு(குரு)
எலும்பு, மஜ்ஜை (சூரியன்)
விந்து, நாதம் (சுக்கிரன்) ஆகியவையாக மாறுகிறது.
உண்ணும் உணவு சீரணமாகி, சிறு குடலின் மூலம் சத்துப் பொருட்கள் திரவமாக உறிஞ்சப்படுகின்றன. இதுவே இரசம் எனப்படும்.
இந்த இரசத்தோடு சிலவகை ரசாயனங்கள் சேர்ந்து இரத்தம் உருவாகிறது.
இரத்தத்தின் ஒரு பகுதி தசையாகின்றது.
தசையிலிருந்து எண்ணை பிரிக்கப்பட்டுக் கொழுப்பாக மாறுகிறது.
கொழுப்பிலிருந்து சுண்ணாம்பு சத்து பிரிக்கப்பட்டு எலும்பாக மாறுகிறது.
எலும்பாக கெட்டிப்பட்ட பகுதி போக மீதமுள்ள திரவம் எலும்புக்குள் மஜ்ஜையாக மாறி மூளையாக அமைகின்றது.
மஜ்ஜை எனும் தாதுவிலிருந்து சக்திவாய்ந்த அணுக்கள் பிரிக்கபட்டு விந்து, நாதம் என்ற தாதுவாக மாறுகின்றன.
விந்து, நாதம் என்பது வித்து சக்தி. இதுவே சீவ வித்து குழம்பு எனபடுகின்றது. இது ஆண்களுக்கு சுக்கிலம் என்றும், பெண்களுக்கு சுரோணிதம் என்றும் அழைக்கப்படுகின்றது.
இவ்வாறு ஏழு வகை தாதுக்களாக பிரித்து நம் ஜீவனை ஆரோக்கியமாக இயக்குவது வித்து சக்திதான். உடலின் அனைத்து பகுதிகளுக்கும் புத்துயிர் தந்து ஆரோக்கியமாக வாழ செயலாற்றிவருகின்றன.
தொப்புள் கொடி மருத்துவ சிகிச்சையும் 9ம் பாவத்தின் அதிசயமும்.
குழந்தை பிறந்த சில நாள்களில் காய்ந்து விழுந்த தொப்புள் கொடியைத் தாயத்தில் வைத்து கழுத்திலோ, கையிலோ அல்லது இடுப்பிலோ அணிவிப்பதை நமது முன்னோர்கள் கடைபிடித்து வந்திருக்கிறார்கள்.
இது தான் பாரம்பரிய ஸ்டெம்செல் பாதுகாப்பு பெட்டகம். எவ்வித பொருட் செலவும் இன்றி, கிட்டதட்ட 30 வருடங்கள் இந்த தூய்மையான ஸ்டெம்சசெல் வித்து வீரியமாக செயல்படும். ஸ்டெம்செல் வித்திற்கு காரக கிரகம் குரு ஆவார்.
ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து, மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் ஆபத்தான காலகட்டத்தில் உபயோகப்படுத்துவதற்கான பல்வேறு ஆராய்ச்சிகள் இன்று உலக அளவில் நடக்கின்றன. இதை நம் ரிஷிகள் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன், 9ம் பாவ சூட்சம ரகசியத்தை விளக்கமாக சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
சரி. ஸ்டெம்செல் என்பது என்ன?
ஸ்டெம்செல் என்பது உயிரணுக்கள். இந்த உயிரணுக்கள் நமது உடம்பின் அடிப்படை ஆதார நிலைகள். இறைசக்தியால் நமக்கு கிடைத்த தூய்மையான வித்து செல்கள். இதற்கு ஆதார காரக கிரகம் குரு ஆவார்.
இந்த ஸ்டெம்செல்கள் இரண்டு வகைப்படும். முதல்வகை Embryonic Stem Cells (கரு உயிரணுக்கள்) இரண்டாவது வகை Adult Stem Cells (வளர்ந்தவர்களின் உயிரணுக்கள்).
கரு உயிரணுக்கள்:
குழந்தை தாயின் கருவிலிருக்கும் போது குழந்தையையும், தாயையும் இணைப்பது தொப்புள் கொடிதான். தொப்புள் கொடி இரத்தம் என்பது குழந்தையின் தொப்புள் கொடியிலிருக்கும் இரத்தம். கொடியை வெட்டியபின் வேண்டாம் என்று தூர எறியப்படும் கொடியின் கெட்டியான பகுதிதான் திசுக்கள். தொப்புள்கொடியில் இருக்கும் இரத்தம், கொடியின் கெட்டியான பகுதிகள் இவை இரண்டிலும் இருக்கும் உயிரணுக்களே கரு உயிரணுக்கள் என்று சொல்லப்படுகின்றன.
"9ம் பாவம் குறிக்கும் உயிர் வித்து தத்துவத்தின்" படி குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்தையும், கொடியின் திசுக்களையும் சேமித்து வைப்பதன் மூலம் குழந்தையை பலவிதமான நோய்களிலிருந்து காப்பாற்றலாம். இந்த உயிரணுக்கள் பலவிதமான தீவிர நோய்களை குணப் படுத்தும் ஆற்றல் உடையவை.
சமிபத்தில் இரத்த புற்றுநோய் பீடித்திருந்த ஒரு குழந்தையை, அதனுடைய சொந்த தொப்புள்கொடியில் உள்ள இரத்த திசுக்களை மறுபடியும் உடலில் செலுத்தி நோயை முழுமையுடன் குணப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
அந்த குழந்தைக்கு இரத்த நாளங்கள் மூலம், பிறந்த போது சேகரித்த, தொப்புள்கொடி வழியாக எடுத்து சேமிக்கப்பட்டு, அதிகுளிர் பாதுகாப்பில் இருந்த, மாசற்ற ஆதி இரத்த திசுக்களை உட்செலுத்தினர்.
5ம் பாவ காரகத்தின் படி, புதிதாக செலுத்தப்பட்ட இந்த இரத்த திசுக்கள் சிறிது சிறிதாக அனைத்து இரத்த சுரப்பிகளை ஆக்கிரமித்து, நல்ல திசுக்களை உருவாக்கி, நோயை போக்கி நிரந்தரமாக குணம் அடைய வைத்துள்ளது.
ஸ்டெம் செல்கள் பலவிதமான திசுக்களாக உருவாகக் கூடிய தன்மை கொண்டவை இவை. நமது உடம்பில் நோய் காரணமாக நாம் இழக்கும் செல்களை எண்ணிலடங்கா எண்ணிக்கையில் மறுபடி உருவாக்குகின்றன இந்த ஸ்டெம் செல்கள்.
இந்த தொப்புள் கொடி இரத்தத்தையும், திசுக்களையும் பாதுகாப்பதன் மூலம் இரத்தப் புற்று நோய், தலசீமியா என்ற ஹீமோகுளோபின் குறைபாடு, இருதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் ஆகியவற்றை குணப் படுத்தலாம்.
"மனிதன் இயற்கை தன்மையுடன் நலமுடன் வாழ திரிகோண பாவங்களின் வலிமை மிகவுவும் அவசியம். மனிதனின் வாழ்க்கை மாற்றத்தால் அவன் இழக்கும் ஆரோகியத்தை ஈடுகட்டுவதில் 1,5,9 ஆகிய பாவங்களின் பங்கு அலாதியானது. ஆபத்து காலத்தில் ஆபத்பாந்தவனாகவும், அனாதரட்சகனாகவும் காக்கும் இறைபாவங்கள் இந்த திரிகோண பாவங்கள் என்றால் அது மிகை ஆகாது."
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்..!
திலக். ஜெ. பாலமுருகன்
ADVANCED KP STELLAR ASTROLOGER | CHENNAI | TAMILNADU | INDIA
+91 - 8 8 2 5 5 1 8 6 3 4.


This article really helped while looking for the best astrologer in Chennai near me. Clear details and practical insights make it useful for people who are new to astrology and want trusted services.
ReplyDelete