உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...
வாழ்வாதாரத்திற்கு உனக்கு ஒரு தொழில்
அது 10ல் மணக்கும் எழில்!
அனைவருக்கும் வணக்கம்!
உன் முயற்சியை வீன் என்பார்
பத்தின்படி நீ நடந்தால் விழிபிதுங்குவார்!
பொருளற்ற வாழ்வை சமூகம் இழிக்கும்
அதை சேர்க்க பத்தை பார்த்தால் உன் யோகம் விழிக்கும்...!
வாழ்வாதாரத்திற்கு உனக்கு ஒரு தொழில்
அது பத்தில் மணக்கும் எழில்!
கருமமே கண்ணாயிரு
கவுரவம் உனக்கு கொடிபிடிக்கும்!
உன் முயற்சியை வீன் என்பார்
பத்தின்படி நீ நடந்தால் விழிபிதுங்குவார்!
பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை! அருளில்லார்கு அவ்வுலகம் இல்லை! என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு பொருட்டாக மதியாதவரையும் பொருள் சேர்த்தால் தூக்கி கொண்டாடும் சமூகம்.
ஜாதகத்தில் பொருளாதரா வளர்ச்சிக்கு சிறப்பாக கருதபடும் பாவங்களான 2,4,6,8,10,12 ஆகிய இரட்டைபடை பாவங்களே தலையாய பொருப்புகளை வகிக்கின்றன. இவை அர்த்தமுள்ள பொருள் பாவங்கள் ஆகும்.
புற வாழ்கையை செம்மைபடுத்திட மாட்சிமை பொருந்திய பாவங்கள்.
"சார ஜோதிடத்தில் ஜாதக பகுப்பாய்வு" நூல் ஆசிரியர், ஜோதிஷ ஆச்சார்யா திருமதி.V.வெண்ணிலா அவர்கள் இரட்டைபடை பாவங்களின் சிறப்பை ஜாதகரின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வகையில் செயல்படும் என்பதை மிக அருமையாக "சார ஜோதிடத்தில் புறம்" என்ற தலைப்பில் விளக்கியிருப்பார்கள்.
தொழில்முறை ஜோதிடர்களுக்கு மட்டும் அல்லாமல் ஜோதிட அடிப்படை அறியாதவர்களும், எளிமையாக புரிந்து விளங்கும் வகையில், தொழில் முனைவோராக்கும் எழிச்சியூட்டும் வீரிய கருத்துகள் மிகுந்த அற்புதமான ஜோதிட கட்டுரை.வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் வழி முறைகளை, தற்கால சூழலோடு பொருள் பாவங்களை வகைபடுத்தி, நன்மை தீமை பாவங்களை அடையாளம் கான எளிய முறை விளக்கமாக "2,4,6,10 வழி பொருள் லக்னத்திற்கு நன்மையும், 8,12 பொருள் வகையில் நன்மை என்றாலும் அகவழியில் ஜாதகருக்கு தீங்குதான்" என்று தர்ம நீதியை ஜோதிட விளக்கமாக ஆணிதரமாக உரைத்திருப்பார்.
கேந்திர பாவங்களில் மிகவும் வலிமை வாய்ந்தது பத்தாம் பாவம். இது ஒரு நிலையான பாவம். ஜாதகரின் தொழில், அந்தஸ்த்தை மையபடுத்தும் கவுரம் தரும் பாவம்.
10ம் பாவம் ஜாதகரின் கடமை, பொறுப்புகள், பொறுப்புகளை பகிர்ந்து அளித்தல், பதவி, பெற்றொர்களுக்கு சிரார்த்தம் புரிதல், தலைமை வகித்தல், ஆளுமையை மையபடுத்திய கோட்பாடுகளை வகுத்தல், கட்டளை இடுதல் ஆகிவற்றையும் குறிக்கும்.
பொருளாதாரத்தை மட்டும் பெரிதென்னி செயலாற்றாமல் கவுரவம், அந்தஸ்த்தை மிகுந்து பெற்றிட முனைப்பூட்டும் கர்ம பாவம் தான் 10ம் பாவம்.
தொழிலில் ஒரு நிலையில் இருந்துவிடாமல் "நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக" வளர்ந்திடவே அருள்புரியும் கர்மவினையாற்றும் பாவம்.
10ம் பாவம் நிர்வாக திறனை மிகைபடுத்தி அதிகாரத்தை தக்கவைத்திட உதவும் நிலையான பாவம். மேலாண்மை கோட்பாடுகளை வகுத்திட்டு, நிர்வாக ஸ்த்திரத்தை பலபடுத்தும்.
நிர்வாகத்தில் சொன்னது செய்தது எல்லாம் போக, நாளின் இறுதியில் என்ன பலன் கிடைத்தது, இலக்கிட்டது போல் அடைந்ததோமா என்று சீர் தூக்கி அறிய வைக்கும் உன்னத பாவம்.
இதுவரை 10ம் பாவத்தின் தனி சிறப்பை அறிந்தோம். 10ம் என்னும் ஜீவன ஸ்தானம் பிற பாவங்களுடன் இணைந்து செயலாற்றும் கூட்டு விளைவுகளை அறிவோம்.
10 -> 3,7,11 பாவ தொடர்பு
3ம் பாவம் ஒரு நிலையற்ற பாவம், ஜாதகரின் தொழில் மாற்றம் நிரைந்த நிலையற்ற தொழிலாக இருக்கும். உதாரணத்திற்கு கணினி துறை. காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றம் அடையும் வளர்ச்சி நிறைந்த தொழில்.7ம் பாவம் என்பது ஒரு நிலையான பாவம் இது, சுய தொழில், பொது மக்கள் சந்திப்பு போன்ற காரகங்களை உள்ளடக்கியது. 10ம் பாவம் தொடர்பு கொண்டால் ஒன்றை கொடுத்து ஒன்றை பெறும் தொழிலாக அமையும்.
11ம் பாவம் என்பது பெரும் கூட்டம், ஜாதகரின் திருப்தியை குறிப்பது. ஜாதகர் இந்த வகையில் பொருள் சேர்க்கும் வழி அறிந்து தொழில் புரிவார்.
10-> 1,5,9 பாவ தொடர்பு
லக்ன பாவ தொடர்பு என்பது தன் சுய முயற்சியில் பொருளீட்ட முனைவார். அரசியல்வாதிகளுக்கு ஏற்றவர். வியாபாரம், தொழிலதிபர்களுக்கு ஆலோசகராக திறம்பட செயல்படகூடியவர். தனது சொந்த அபிப்ராயங்களை தொலைகாட்சியில் வாதாடி பொருளீட்டும் கொவுரவ வித்தகர்.5,9ம் பாவ தொடர்பு பொறுபற்ற தன்மை, புறம் சார்ந்த பெரும் முதலீடு (Heavy Investment)போட்டு செய்யும் நிலையான தொழிலுக்கு ஏற்றது அல்ல(Not suitable) என்றாலும் அகம் சார்ந்த கலை(Arts), விளையாட்டு(Sports), கமிஷன் போன்ற தொழில் கைகொடுக்கும்.
"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்ற வகையில் தொழில் சமூகத்தில் இவர்களது சேவைகளும் அங்கிகரிக்கபடுகிறது. இயற்கை ஆளுமையும், ஆன்மீக பண்பும் வெளிபட்டு ஜோதிட ஆலோசனை வழங்கி சமூகத்தை வழிநடத்தும் இறை ஆசி பெற்ற தர்மவான்களையும் உருவாக்குவதும் இந்த அமைப்பில்தான்.
10 - > 2,4,6,8 பாவ தொடர்பு
இந்த அமைப்பு உடையவர்கள் கார்பரேட் சாணக்கியர்கள். தொழிலுலக ஜாம்பாவான்கள். தொழிலிலும், பதவியிலும் கொடிகட்டி பறக்க அதிஉச்சம் நிறைந்த நிலைத்த யோகமான அமைப்பு.10 -> 8,12 பாவ தொடர்பு
"கார்பரேட் உலகம் மோசமானது! அதில் அழுக்கான அரசியல் உள்ளது!" என்பது எளியோரின் கருத்து. போட்டி நிறைந்த வியாபார சமூகத்தை (Business community) பலம் கொண்டு சமாளிக்க 8ம் பாவத்தின் துணை அவசியம். நல்லவன் என்பதைவிட வல்வன் என்பதே தொழில் உலகிற்கு முதல் தகுதி. 10க்கு 11ம் பாவம் 8ம் பாவம் ஊருகாய் போல் தொட்டு கொண்டால் விருந்து சுவைக்கும் தொழிலும் சிறக்கும். கடும் முயற்சி(Hard Work) உச்சத்தை தரும் அதற்கு 8ம் பாவம் அருள் தரும்.12 -> வியாபார ஸ்தாபனத்தை (Business Establishment) விரிவுபடுத்தி பல தொழில் புரிந்து பொருளீட்ட முனைய வைக்கும் சூட்சம பாவம். அகல கால் ஆபத்து, ஆழம் அறிந்து காலைவிட்டால் அனைத்தும் நம் வசமே என்று உணர்த்தும் முன் எச்சரிக்கை பாவ தொடர்பு.
"மண் மீது சீர் பெருக்கி, மாளாதப் பேர் நிறுத்தி, பொன்னும், பொருளும் மேலான செல்வமும், துணிவோடும், தெளிவோடும், வளங்கூட்டும் 10ம் பாவம் என்றால் அது மிகையில்லை!"என்பதை பொன் எழுத்துக்களாக கருதி "சார ஜோதிடத்தில் ஜாதக பகுப்பாய்வு" நூல் ஆசிரியர், ஜோதிஷ ஆச்சார்யா திருமதி.V.வெண்ணிலா அவர்களின் பொருள்நீதி வாசக சிந்தனையுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்...
திலக். ஜெ. பாலமுருகன்
ADVANCED KP STELLAR ASTROLOGER
CHENNAI | TAMILNADU | INDIA
+91 - 8 8 2 5 5 1 8 6 3 4.
No comments:
Post a Comment