உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி!
என் மகனுக்கு திருமண வைபோகம் எப்போது?
அனைவருக்கும் வணக்கம்.
கடந்த 2018 நவம்பர் மாதம் 03ம் தேதி, காலை நேரத்தில் அடையாளம் தெரியத எண்ணிலிருந்து என் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டார்.
முகநூல் பக்கத்தில் நமது ஜோதிட கட்டுரைகளை படித்து வருவதாகவும் அதன் மூலம் தங்களை தொடர்புகொண்டேன் என்றார்.
அவருக்கு எமது பணிவான நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.
எங்களுக்கு திருமணம் ஆகி ரொம்ப வருடம் கழித்து தவம் கிடந்து ஒரு ஆண் வாரிசை பெற்றெடுத்தோம். கோடி கணக்கில் பரம்பரை சொத்துகள், மிக பெரிய ஜவுளி நிறுவனத்திற்கு ஒரே வாரிசான என் மகனுக்கு காலாகாலத்தில் திருமணம் முடியவில்லை.வசதியில் எந்த குறையும் இல்லாமல் ஆண்டவன் எங்களை வைத்திருக்கின்றான். ஆனால் தனது ஒரே மகனுக்கு திருமண பந்தம் இன்னும் கூடி வரவில்லை...! வேண்டாத தெய்வம் இல்லை, செய்யாத பரிகாரமும் இல்லை... பல வருடங்களாக பெண் தேடி வருவதாகவும், காரணமே இல்லாமல் அவை தடைபெறுவதாகவும், "என் மகனுக்கு திருமண வைபோகம் எப்போது அமையும் ?" என்று ஜாதகத்தை கணித்து நல்ல செய்தி சொல்லுங்கள் என்று மிகவும் கவலை தோய்ந்த குரலில் பேசினார் அந்த பெரியவர்.
அவரது மகனின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த ஊர் விவரங்களை வாட்ஸ்பில் அனுப்பி வைத்தார்கள்.
ஆளும் கிரகங்களின் துணை கொண்டு ஜாதகரின் பிறப்பு நேரத்தை துல்லியபடுத்தி ஜாதகத்தை கணித்தேன். ஐந்து நொடி வித்தியாசத்தில் துல்லிய ஜாதகம் கிடைத்துவிட்டது.
ஜாதகர் 28/04/1986 அன்று மாலை 06:29:55 மணிக்கு துலா லக்னத்தில், தனுசு ராசியில், மூலம் 4ம் பாதத்தில் சுக்கிரன் ஹோரையில் ஜனித்திருக்கின்றார்.
பிறந்த போது தசா இருப்பு கேது 01வ 7மா 24நாள்.
- ஜாதகரின் லக்ன பாவம் 16° 12'ல் துலாத்தில் ராகு நட்சத்திரம், சுக்கிரன் உபநட்சத்திரம், ராகு உபஉபநட்சத்திரத்திரத்தில் அமைந்துள்ளது. லக்ன பாவத்தின் உபாதிபதியாக களத்திரகாரகன் சுக்கிரன், ஒன்றாம்பாவம் 1,3,5,7,11 ஆகிய சுப பாவங்களை தொடர்புகொண்டுள்ளது. லக்ன நிலை ஜாதகத்தில் நன்றாக உள்ளது.
- குடும்ப ஸ்தானமான இரண்டாம் பாவமுனைக்கு இயற்கை சுப கிரகமான குரு உபாதிபதியாகவும் மேலும் குரு 2,4,8 ஆகிய பாவங்களுக்கும் உபாதிபதியாக அமைந்துள்ளது. குரு சுயநட்சத்திரத்திலும், சுயஉபநட்சத்திரத்திலும் அமைந்துள்ளதால் ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் கெட்டுள்ளது. இந்த அமைப்பில் பொருளாதாரம் நன்கு வளரும் ஆனால் குடும்ப அமைவு சற்று காலம் தாழ்த்தும்.
- களத்திர ஸ்தானமான 7ம் பாவத்திற்கு சூரியன் உபாதிபதியாக அமைந்து, சூரியன் அமர்ந்த நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரம் சுக்கிரன் ஆவார். சூரியன் 7ம் பாவ தொடர்பு பெரும்பாலும் தாமத திருமணத்தையும், பிரச்சனையுடன் கூடிய அமைவையும் தரும். ஆனால் சூரியன் அமர்ந்த நட்சத்திரம் சுக்கிரன் மற்றும் 7ம் பாவத்தின் தொடர்பு ஒற்றைபடை பாவங்களான 1,3,5,7,11. களத்திர ஸ்தானம் முழுமையாக கெடவில்லை. விதிபடி ஜாதகருக்கு களத்திர யோகம் உண்டு என ஊர்ஜிதமாகிறது.
- களத்திரகாரகன் சுக்கிரன் ஜாதகத்தில் 1,3,5,7,11 ஆகிய பாவங்களுக்கு உபாதிபதியாக அமைந்து சுப வலுவுடன் இருக்கின்றார்.
- குரு 2,4,8 ஆகிய பாவங்களுக்கு உபாதிபதியாக அமைந்து கெட்டுகிடக்கின்றார். குரு சுப தன்மையை இழந்துள்ளார்.
- களத்திர பாவமுனையின் உபாதிபதி சூரியன் சுப வலுவுடன் உள்ளது.
- பூர்வ புண்ணிய (5ம் பாவம்) ஸ்தானத்திற்கு சுக்கிரன் பொறுப்பேற்று வலுவாக உள்ளார்.
- பாக்கிய ஸ்தானத்திற்கு (9ம் பாவம்) புதன் உபாதிபதியாக அமைந்து மேலும் தொடர்புகொண்ட பாவங்கள் 1,3,5,7,9.
ஆக விதிபடி ஜாதகருக்கு திருமண வாழ்வில் இணைய 75% கொடுப்பினை உள்ளது என்பதை மேற்கண்ட ஆய்வுகள் மூலம் அறிய முடிகின்றது.
விதிபடி இவ்வளவு சாத்தியங்கள் இருந்தும் ஜாதகருக்கு இதுவரை ஏன் திருமணம் நடைபெறவில்லை? வேறு என்ன காரணத்தால் திருமணம் தடைபட்டுள்ளது?பொதுவாக விதிபடி உள்ள யோகங்களை அனுபவிக்க வேண்டும் என்றால் ஜாதகருக்கு தசாபுக்திகள் ஒத்துழைக்க வேண்டும். இளமையில் சரியான தசாபுக்திகள் அமைந்துவிட்டால், காலாகாலத்தில் திருமணம் நடந்து வாரிசை பெற்றெடுத்து குதுகலமாக வாழ்வார்கள். தசா புக்திகள் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றால் அனைத்தும் பிரச்சனையே.
சரி.. ஜாதகருக்கு திருமண வயது கால கட்டங்களான 25 வயது முதல் நடைபெற்ற தசா புக்திகளை ஆராய்ந்தால் திருமணம் தள்ளி சென்றதற்கான காரகங்கள் நமக்கு புரிந்துவிடும்.
ஜாதகருக்கு 21வயதில் சூரிய தசை ஆரம்பம். சூரிய தசை ஆறுவருடம். இது விடலை பருவம். சனி புக்தி முடியும் வரை அதாவது 24வயது முடியும் வரை திருமண பேச்சி எழுவதற்கு வாய்ப்பில்லை.
அதன் பிறகு 25 வயது தொடக்கத்தில் ஜாதகரின் தந்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் தன் மகனிற்கு பெண் தேட ஆரம்பித்துள்ளார். இந்த காலகட்டத்தில் சனிபுக்தி மத்தியில் ஜாதகர் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் ஜாதகர் விபத்தில் அந்த அளவிற்கு அடிபட்டுள்ளார். ஜாதகர் பூரண குணமடைய இரு வருடங்கள் ஆகிவிட்டது. யோகமான சூரிய தசையும் 27வயது 7மாதம் தொடக்கத்தில் முடிந்து அடுத்து சந்திர தசை ஆரம்பித்துள்ளது.
சந்திர தசை 4,8,12 ஆகிய பாவங்களை முன்னிருத்தி தசை நடத்தியுள்ளது. இது ஜாதகருக்கு தயவு தாட்சனையின்றி பல தடங்களையும், வலி வேதனைகளை தரகூடிய கொடுமையான காலகட்டம். அதிஷ்டம் இன்றி துர்பாக்கியத்தை அனுபவிக்க வைத்திடும். இறை கொடுப்பினை இன்றி ஜாதகரை தவிக்க வைத்திடும் கண்டமான காலகட்டம்.
இதன் காரணமாகதான் சந்திர தசையில், திருமணம் கூடி வராமல் அனைத்தும் கை நழுவி போனது போல் ஜாதகரின் குடும்பமே மகனின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து கவலைபட்டுள்ளார்கள்.
திருமணம் தள்ளிபோனதற்கான விளக்கங்களை ஜாதகரின் தந்தைக்கு மேற் கண்ட காரணங்களை எடுத்து கூறி விளக்கினேன்.
சரி. விதிபடி திருமணம் உண்டு என கணித்தோம் அல்லவா? அப்படி என்றால் இந்த ஜாதகருக்கு திருமண வைபோகம் எப்போது??ஜாதகம் கணித்த அன்று நடப்பில் உள்ள தசா புக்திகள் ஆராய்ந்தோம்.
தசை : சந்திரன் (4,8,12)
புக்தி: சனி (10,12)
அந்தரம்: சுக்கிரன் (1,3,5,7,11)
திருமணத்திற்கு யோகம் அளிக்க கூடிய சுக்கிர மற்றும் சூரிய அந்திரம் கிட்டதட்ட நான்கு மாதங்கள் நடைபெரும். அக்டோபர் 2018 தொடங்கி அடுத்த வருடம் பிப்ரவரி 2019 வரை நடைபெறும். இந்த காலகட்டத்தை சரியாக பயன்பாடுத்திக்கொண்டால் ஜாதகருக்கு திருமணம் முடிந்துவிடும் என்று ஜாதகரின் தந்தைக்கு உறுதியாக கூறினேன்.நம்பிக்கையுடன் செயல்படுங்கள் நிச்சயம் தங்கள் மகன் தம்பதி சகிதமாக ஊரார் முன்னிலையில் தங்களுக்கு பாத பூஜை செய்யும் பெரும் பாக்கியத்தை அடைவார் என்றேன்.
இதை கேட்டு ஜாதகரின் தந்தைமிகுந்த சந்தோஷத்தோடு எமக்கு நன்றி கூறி... பெண் தேடுவதை துரிதப்படுத்துவதாக கூறினார்.
ஜாதகரின் தந்தை சரியாக ஒன்றை மாதம் கழித்து சென்ற வாரம் எமக்கு போன் செய்தார்.
யாம் ஜாதகத்தில் கணித்து கூறியபடி அவரது மகனுக்கு நல்ல இடத்தில், அனைவரது மனதிற்கும் பிடித்த மாதிரி, தன் மகனுக்கு பெண் அமைந்து விட்டதாகவும், வருகின்ற பிப்ரவரி 2019தில் திருமணம் நிச்சயத்துள்ளதாகவும், மிகுந்த சந்தோஷத்தோடு கூறி எம்மை நன்றி கூறி வாழ்த்தினார்.
அந்த தருணம் இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் நினைவுகூறி, எம் குருநாதருக்கு சாஷ்டாங்கமாக நன்றி கூறி கொண்டேன்.
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்...
திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer
+91-8 8 2 5 5 1 8 6 3 4
astrotilakjbalamurugan@gmail.com